ராகுல் டிராவிட்டுக்கு ரூ. 2.4 கோடி வழங்கியது பிசிசிஐ

  நந்தினி   | Last Modified : 08 Feb, 2018 04:36 pm


யு-19 உலக கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தொழிற்முறை கட்டணமாக (ஆறு மாத சம்பளம்) ரூ.2.43 கோடியை பிசிசிஐ-யிடம் இருந்து பெற்றுள்ளார். யு-19 அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மெம்ப்ரேய், 4 மாதங்களுக்கு ரூ.27 லட்சத்தை பெற்றிருக்கிறார். இந்த விவரங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு, ஒரு முறை நலனாக ரூ.60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அணியில் செயல்பட்டு வரும், அஜின்க்யா ரஹானே (ரூ. 1.47 கோடி), ஹர்திக் பாண்ட்யா (ரூ. 1.27 கோடி), குலதீப் யாதவ் (ரூ. 1.08 கோடி), வ்ரிதிமான் சாஹா (ரூ. 57.81 லட்சம்) மற்றும் அபினவ் முகுந்த் (ரூ. 33.69 லட்சம்) ஆகியோர் கடந்த ஆண்டு செய்த சேவைகளுக்காக இந்த கட்டணம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இது தவிர, டெல்லி அணி வீரர் மிதுன் மின்ஹாஸ், கடந்த இரண்டு சீசன்களில் தலைமை பயிற்சியாளராக சிறந்து விளங்கியமைக்காக ரூ.75.60 லட்சத்தை பிசிசிஐ வழங்கியுள்ளது. முன்னாள் வீரர் ககன் க்ஹோடாவுக்கு ரூ.54 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், வர்ணனையாளர்களாக மாறிய கிரிக்கெட் வீரர்கள் சஞ்சய் மஞ்சரேக்கருக்கு ரூ. 36.28 லட்சமும், முரளி கார்த்திக்கிற்கு ரூ. 30.61 லட்சமும் வழங்கப்பட்டு உள்ளது. இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருந்த விவரங்களில் இந்திய சீனியர் அணி வீரர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் இல்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close