அசாருதீனை முறியடித்து சாதனை படைத்த விராட் கோலி

  நந்தினி   | Last Modified : 11 Feb, 2018 08:39 pm


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, மழை காரணமாக தோல்வியை தழுவியது. என்றாலும், துவக்க வீரர் தவான் மற்றும் கேப்டன் விராட்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும், விராட் பல சாதனைகளை படைத்து வரும் தருணத்தில் நேற்றும் ஒரு சாதனையை முறியடித்திருக்கிறார். 

நேற்று 75 ரன் அடித்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் விராட் 9423 ரன்கள் விளாசியுள்ளார். 206 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி உள்ள அவரின் சராசரி, 57.45 ஆக இருக்கிறது. இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில், முன்னாள் கேப்டன் அசாருதீனை முறியடித்து, 5-வது இடத்தை விராட் பிடித்துள்ளார். சர்வதேச அளவில், 16ம் இடத்தில் விராட் இருக்கிறார். 

சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில் 18426 ரன் குவித்து லிஸ்டில் முதலிடத்தில் உள்ளார்.  சௌரவ் கங்குலி 11363 ரன்னுடன் 2-வது இடத்திலும், ராகுல் டிராவிட் 10889 ரன்னுடன் 3-வது, எம்.எஸ். தோனி 9954 ரன்னுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். 

சச்சினுக்கு பின், இலங்கையின் குமார் சங்ககாரா 14243 ரன் எடுத்து, சர்வதேச அளவில் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 13704 ரன்னுடன் 3-வது இடத்திலும் இருக்கின்றனர். விராட்டுக்கு முன், ஏபி டி வில்லியர்ஸ் (9541) இருக்கிறார். கிறிஸ் கெய்ல் 275 போட்டிகளில் 9420 ரன் எடுத்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close