குளிர்கால ஒலிம்பிக்: தோல்வியுடன் ஓய்வு பெற்றார் ஷிவ கேசவன்

  நந்தினி   | Last Modified : 13 Feb, 2018 09:11 am


தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியில் நேற்று நடந்த லூஜ் போட்டியில் இந்திய வீரரும், ஆசிய சாம்பியனுமான ஷிவ கேசவன், கடைசி தகுதி சுற்றிலும் ஏமாற்றம் அளித்தார்.

மூன்று ரவுண்டுக்கு முடிவில், ஒட்டுமொத்தமாக 34-வது இடத்திற்கு அவர் தள்ளப்பட்டதால், இறுதிச் சுற்றுக்கள் வாய்ப்பை இழந்தார். இதனால், தோல்வியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் கேசவன். 1998ம் ஆண்டு தனது 16 வயதில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கிய கேசவனுக்கு, இது 6-வது ஒலிம்பிக் போட்டியாகும். கேசவன் 2011, 2012, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளுக்கான ஆசிய சாம்பியன் ஆவார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close