ஆசிய போட்டி: இந்தியாவுக்கு 5 தங்கப் பதக்கம்

  நந்தினி   | Last Modified : 15 Feb, 2018 07:48 pm


இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய கேம்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள், ஐந்து தங்கம், ஒரு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளன.

ஆண்கள் பிரிவில் மனிஷ் கௌஷிக் (60 கிலோ), ஷியாம் குமார் (49 கிலோ), ஷைக் சல்மான் அன்வர் (52 கிலோ), ஆஷிஷ் (64 கிலோ) மற்றும் பெண்கள் பிரிவில் பவித்ரா (60 கிலோ) ஆகியோர் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று, தங்கம் வென்று அசத்தினர்.

சஷி கபூர் (57 கிலோ) இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததால் வெள்ளி பதக்கம் பெற்றார். முகமது எட்டாஷ் கான் (56 கிலோ), ரித்து க்ரேவால் (51 கிலோ), பவன் குமார் (69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ) ஆகியோர் அரையிறுதியில் தோல்வி கண்டு வெண்கலப் பதக்கங்களை பெற்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close