குடும்பத்தையே களத்தில் இறக்கீட்டீங்க... பாக். வீரரை கலாய்த்த கபில் சர்மா

  ஐஸ்வர்யா   | Last Modified : 23 Feb, 2018 03:33 pm

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கம்ரன் அக்மலை இந்தி சினிமாவில் புகழ்பெற்ற டி.வி தொகுப்பாளரும் ஸ்டேண்ட் அப் காமெடியனுமான கபில்சர்மா சம கலாய் கலாய்த்துள்ளார்.

இந்தியாவில் ஐ.பி.எல் போல, பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பி.எஸ்.எல் தொடக்க விழா துபாயில் நேற்று நடந்தது. தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கபில்சர்மா கலந்து கொண்டார். கபில் காமெடி தொடக்க விழா அரங்கில் சிரிப்பலைகளை எழ செய்தது. 

கம்ரன் அக்மலை பார்த்து நீங்க, உங்க தம்பி மற்றும், உறவினர் பாபர் அஸாம், சபீர் அஸாம் என அனைவருமே களத்தில் இறங்கீட்டிங்க... இதற்கு அடுத்து உங்க பிள்ளைகள் அனைவரும் களத்தில் இறங்கிடுவாங்க... இனி உங்க பாகிஸ்தான் டீமுக்கு வேற எந்த குடும்பமும் தேவையில்லை என கலாய்த்தார். உடனே அரங்கில் இருந்த அனைவரும் பயங்கரமாக சிரித்தனர்.

கபில் சர்மாவை ஏன் கிரிக்கெட் போட்டியின் தொடக்கவிழாவிற்கு அழைத்து வந்தீர்கள் என பெஷாவர் ஜல்மி கிரிக்கெட் அணியின் அதிபர் ஜாவேத் அப்ரிடியிடம் கேட்டபோது, "கபில் சர்மா சிறந்த காமெடியன். கிரிக்கெட் தொடக்கம் வீரர்களும் ஜாலியாக இருக்கட்டும் என்று அவரை அழைத்து வந்தோம்" என கூறினார். விழாவில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் டேரன் ஷமி, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோர்டான், அக்‌ஷர், பாகிஸ்தானின் ஹசன் அலி, ஹரிஸ் சோகைல், கம்ரன் அக்மல், முகமது ஹபீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close