துப்பாக்கிச் சுடுதலில் 16 வயது இந்திய வீராங்கனை இரண்டு தங்கம்!!

  SRK   | Last Modified : 06 Mar, 2018 10:22 am


மெக்சிகோவில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில், இளம் இந்திய வீராங்கனை மனு பாகர் இரண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

16 வயதேயான பாகர், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் ஒற்றையர் போட்டியில் தங்கம் வென்றார். பின்னர், 10 மீட்டர் ஏர் பிஸ்டலின் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வாலுடன் சேர்ந்து தங்கம் வென்றார். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் மெக்சிகோ நாட்டு வீராங்கனை அலேஹான்ந்ரோ வாஸ்கெஸ்  மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில்  அவரை வீழ்த்தி தங்கம் வென்றார். 3வது இடத்தை பிரான்ஸ் நாட்டு வீராங்கனை கோபர்வில் பிடித்த நிலையில், 4வது இடத்தை இந்திய வீராங்கனை யாஷாஸ்வினி தேஸ்வால் பிடித்தார். '

கடந்த மாதம் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த கேலோ விளையாட்டு போட்டிகளில் மனு பாகர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close