செல்சியை பந்தாடிய மெஸ்ஸி; 100வது கோல் அடித்து சாதனை!

  SRK   | Last Modified : 15 Mar, 2018 12:09 pm


நேற்று நடந்த சாம்பியன்ஸ் கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில், செல்சியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, பார்சிலோனா வெற்றி பெற்றது. 

ரவுண்ட் ஆஃப் சுற்றின் முதல் போட்டியில், செல்சியுடன் 1-1 என டிரா செய்திருந்தது பார்சிலோனா. இரண்டாவது போட்டியில் 0-0 என டிரா செய்தால் போதும் எனப் பார்சிலோனாவும், ஒரு கோலாவது அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் செல்சியும் மோதின. 

போட்டி துவங்கிய, 3வது நிமிடத்திலேயே மெஸ்ஸி சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். பின்னர், 20வது நிமிடத்தில், மெஸ்ஸி 2 வீரர்களைத் தாண்டி பந்தை எடுத்துச் சென்று பாஸ் செய்ய, அதை இளம் வீரர் டெம்பெலே கோலாக்கி 2-0 என முன்னிலை கொடுத்தார். செல்சி அணி சில வாய்ப்புகளை உருவாக்கினாலும், கோல் அடிக்க முடியவில்லை. 63வது நிமிடத்தின் போது மெஸ்ஸி மீண்டும் 3 பேரைத் தாண்டி சென்று மற்றொரு கோல் அடித்தார். இது சாம்பியன்ஸ் கோப்பையில் மெஸ்ஸி அடிக்கும் 100வது கோலாகும். 

இரண்டு போட்டிகளையும் சேர்த்து பார்சிலோனா 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close