கோலி- அனுஷ்காவை விருந்துக்கு அழைத்த இலங்கை அமைச்சர்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 15 Mar, 2018 07:53 pm


விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இலங்கைக்கு வர வேண்டும் என்று அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜெய்சேகரா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் தீவிர ரசிகர்களுள் ஒருவர் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜெய்சேகரா. விராட் கோலியின் ஆட்டத்தை காணவே இந்தியா வரும் தீவிர ரசிகர்களுள் ஒருவர் இவர். முத்தரப்பு டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் விராத் கோலி, அவரது மனைவி அனுஷ்காவுடன் இலங்கைக்கு வரும்படி அமைச்சர் தயாஸ்ரீ ஜெய்சேகரா அழைப்பு விடுத்துள்ளார். 


இதுகுறித்து தயாஸ்ரீ ஜெய்சேகரா கூறுகையில் ‘விராட் கோலியை விளையாடுவதற்காக இலங்கைக்கு அழைக்கவில்லை. அவர் தனது மனைவியுடன் எங்கள் நாட்டில் சில நாட்கள் செலவழிக்க வேண்டும். திருமணத்துக்குப் பிறகு அவர் இலங்கை வரவில்லை. இப்போது எங்கள் நாட்டு விருந்தினராக அவர் வரவேண்டும். எங்கள் நாட்டில் வந்து அங்குள்ள சுற்றுலா தளங்களை பார்க்க வேண்டும். எனது ரசிகரான விராட்டுக்கு என் வீட்டில் விருந்து அளிக்க விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close