2வது டி20 LIVE: தென் ஆப்பிரிக்கா வெற்றி; தொடர் சமன்

  SRK   | Last Modified : 22 Feb, 2018 12:57 am

12.50PM: தென் ஆப்பிரிக்கா இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதிரடி பேட்ஸ்மேன் க்ளாஸன் அபாரமாக விளையாடி 69 ரன்களுக்கு அவுட்டான பின், கேப்டன் டுமினி 64 ரன்கள் விளாசி, 18.4 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற உதவினார். டி20 தொடர் தற்போது 1-1 என சமன் செய்யப்பட்டுள்ளது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி போட்டி 24ம் தேதி நடைபெறுகிறது.

12.30AM: 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது தென் ஆப்பிரிக்கா. 40 ரன்களில் டுமினியும், பெஹர்தியனும் களத்தில் உள்ளனர்.

12.00AM: 11 ஓவர்கள் முடிவில், தென் ஆப்பிரிக்கா அணி, 2 விக்கெட் இழந்து 100 ரன்கள் தொட்டுள்ளது. அதிரடியாக விளையாடி வரும் க்ளாஸன்(47) மற்றும் டுமினி(22) களத்தில் உள்ளனர். முன்னதாக துவக்க வீரர்களில் ஹென்ரிக்ஸ் 26 ரன்களிலும், ஸ்மட்ஸ் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

11.00PM: முதல் இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழந்து 188 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி ஓவர்களில் சிறப்பாக விளையாடிய மனிஷ் பாண்டே(79) மற்றும் தோனி(52) அரைசதம் அடித்தனர்.

10.15PM: 10 ஓவர்கள் முடிவில், இந்தியா 3 விக்கெட் இழந்து 85 ரன்கள் எடுத்துள்ளது. தொய்வான துவக்கத்திற்கு பிறகு, சுரேஷ் ரெய்னா(27) மற்றும் மனிஷ் பாண்டே(32) வேகமாக ரன் குவித்து வருகின்றனர்.

10.00PM: 5 ஓவர்கள் முடிவில் இந்தியா 45 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தவித்து வருகிறது. 24 ரன்களில் தவான் அவுட்டான பின், கோலி வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். சுரேஷ் ரெய்னா(20) அதிரடியாக விளையாடி வருகிறார்.

9.40PM: முதல் ஓவரில் ரன்கள் எதுவும் அடிக்காத நிலையில், இந்தியாவின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர் டலா வீசிய 2வது ஓவரின் முதல் பந்தில் டக் அவுட்டானார். 1.1 ஓவர்களில் இந்தியா ரன் எதுவும் எடுக்காமல் ஒரு விக்கெட் இழந்துள்ளது.

9.30PM: தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்றது. கேப்டன் டுமினி பீல்டிங் தேர்வு செய்தார்.

9.25PM: இன்று இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடக்கும் 2வது டி20 போட்டி சற்று நேரத்தில் துவங்க இருக்கிறது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் இல்லை. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இந்த போட்டியிலும் வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா வென்றுவிடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close