உலக கோப்பை துப்பாக்கிச் சூடு போட்டி: தங்கம் வென்றார் இளவேனில்!

  நந்தினி   | Last Modified : 22 Mar, 2018 03:54 pm


இந்திய துப்பாக்கிச் சூடு வீராங்கனை இளவேனில் வாலறிவன், ஜூனியர் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

சிட்னியில் நடந்து வரும் ஜூனியர் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக கோப்பை போட்டியில், பெண்களுக்கான 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில், இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன், முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த போட்டியின் முடிவில், 249.8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த இளவேனில், தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 

சீன தைபேவின் யிங் ஷின்-லின் வெள்ளிப் பதக்கமும், தனது முதல் ஐ.எஸ்.எஸ்.எஃப் போட்டியில் கலந்து கொண்ட சீன வீராங்கனை ஸிரோ வாங் வெண்கலப் பதக்கமும் வென்றனர். மற்ற இந்திய வீராங்கனைகளான ஸ்ரேயா அகர்வால் மற்றும் ஸியெனா கஹிட்டா, 6-வது, 7-வது இடங்களின் முறையே பிடித்தனர்.

அணிகளுக்கான போட்டியிலும், ஸ்ரேயா அகர்வால் மற்றும் ஸியெனா கஹிட்டாவுடன் இணைந்து இளவேனில் வாலறிவன், தங்கம் வென்றிருந்தார். சீன தைபே அணி வெள்ளி, சீன குடியரசு அணி வெண்கலம் வென்றது. 

ஆண்கள் 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில், இந்திய வீரர் அர்ஜுன் பபுதா வெண்கலப் பதக்கம் வென்றார். ஐ.எஸ்.எஸ்.எஃப் போட்டியில் அர்ஜுன் வெல்லும் இரண்டாவது பதக்கம் இதுவாகும். அவர் 226.3 புள்ளிகள் பெற்றிருந்தார். சீனாவின் லியு யுக்கி (247.1) தங்கப் பதக்கமும், ஹங்கேரியாவின் சலன் பேக்லெர் (246.0) வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். மற்ற இந்திய வீரர்களான சூர்யா பிரதாப் சிங் மற்றும் ஷாஹு துஷார் மானே, 6-வது, 8-வது இடங்களின் முறையே பிடித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close