உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் விவான் கபூர் பதக்கம் வென்றார்

  நந்தினி   | Last Modified : 23 Mar, 2018 03:49 pm


ஆஸ்திரேலியாவின் சிட்னியில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் நடத்தும் ஜூனியர் உலக கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இன்று நடந்த ஆண்கள் ட்ராப் தனிநபர் மற்றும் அணி பிரிவு போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

ஆண்கள் தனிநபர் போட்டியில், இந்திய வீரர் விவான் கபூர் தனது முதல் உலக கோப்பை பதக்கத்தை வென்றார். இத்தாலியின் மாட்டியோ மருங்கியே தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் யிலியே வுயங் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.

அணிகள் பிரிவில், விவான் கபூர், ஷெரன் மற்றும் இலாஹி ஆகியோரை கொண்ட இந்திய அணி வெண்கலம் வென்றது. சீனா அணி தங்கமும், ஆஸ்திரேலியா அணி வெள்ளியும் பெற்றது. 

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில், இதுவரை இந்திய அணி இரண்டு தங்கம் மற்றும் மூன்று வெண்கலப் பதக்கத்தை பெற்று, இரண்டாவது இடத்தில் உள்ளது. சீன அணி, ஐந்து தங்கம், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close