தோனிக்கு இன்றைய நாள் மறக்கமுடியாத நாளாம்... ஏன் தெரியுமா?- வீடியோ

  ஐஸ்வர்யா   | Last Modified : 23 Mar, 2018 11:05 pm


டி20 உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான அணி வங்கதேசத்தை கடைசி ஓவரில் தோற்கடித்த நாள் இன்று தான். இன்றைய நாளை தோனியின் ரசிகர்கள் சிலர் சமூகவலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றன.

கடந்த இரு தினங்களுக்கு முன் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் வங்கதேசத்தை இந்திய அணி வீழ்த்தியது. 18வது ஓவர் வரை வங்கதேச அணியின் வசம் வெற்றி இருந்தது. கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இதனால் இந்திய அணி தோல்வி என்றே எல்லோரும் உறுதி செய்துவிட்டார்கள்.


தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் மூன்று சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் விளாச இந்தியா வெற்றி பெற்றது. இதில் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் அசத்தலாக தினேஷ் சிக்ஸர் அடித்தார். இதையடுத்து ஒரே இரவில் தினேஷ் கார்த்தியின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவியது.

இந்தப் போட்டி, டி20 உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான அணி வங்கதேசத்தை கடைசி ஓவரில் தோற்கடித்ததை பலருக்கும் நினைவுபடுத்தியது. தோனியுடன் தினேஷ் கார்த்திக்கை ஒப்பிட்டு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டினர். 


2016ம் ஆண்டு இந்தியா, வங்கதேசத்திற்கு இடையிலான அந்தப் போட்டி நடைபெற்றது இதேநாளில் தான்.அப்போது முதலில் இந்திய அணி தான் பேட்டிங் செய்தது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. 148 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 11 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் என்பதால், தோனி அணி எப்படியும் வெற்றி பெற வைத்துவிடும் என்று நினைத்தால் இப்படி ஆகிவிட்டதே என்று உறைந்து போய்விட்டார்கள். 


4வது பந்தில் ஒரு விக்கெட் விழுந்தது. அப்பொழுதும் நிச்சயமற்ற நிலைதான் இருந்தது. இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே வேண்டும். ஒரு ரன் அடித்தாலும் டிரா ஆகிவிடும். இதனால், வெற்றி வங்கதேசத்துக்கே என எதிர்ப்பார்க்கப்பட்ட த்ரில்லர் மேட்ச்சில் தோனி இருந்தும் தோற்றுவிடுவோமோ என்ற பயம் அனைவருக்கும் இருந்தது.

இதனால், கடைசி பந்தில் இரண்டு ரன்கள்... விருவிருப்பாக கண் சிமிட்டாமல் பார்த்த ரசிகர்களுக்கு அடித்தது ஒரு ஜாக்பாட் கடைசி பந்தை சாதுரியமாக பிடித்த தோனி, பந்தை எடுத்துக் கொண்டு ஸ்டம்ப் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக ஓடி ரன் அவுட் செய்தார். இதனால் வங்கதேசத்தின் வசம் இருந்த வெற்றியை இந்திய அணி தட்டிப் பறித்தது. இதேபோல் இந்த வருடம் திக் திக் நிமிடங்களில் வெற்றி கனியை பிடித்தது இந்தியா.. அன்று தோனி! இன்று தினேஷ் கார்த்தி!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close