சென்னை அணியுடன் குத்தாட்டம் போடும் தோனி- வைரல் வீடியோ

  ஐஸ்வர்யா   | Last Modified : 24 Mar, 2018 04:50 pm


ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில தினங்களில் தொடங்கப்படுகிறது. அணிக்கு தோனி, ரெய்னா, ஜடேஜா திரும்பியுள்ளது ரசிகர்களை இன்னும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


ஐபிஎல் 11வது சீசனில் விளையாடுவதற்கு, கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது. இதற்காக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை துவக்கியுள்ளது. பயிற்சி ஒருபுறம் இருக்க ரசிகர்களின் பட்டாளம் மறுபுறம். சென்னை அணிக்கு விசில் போட ரசிகர்கள் தயாராகிவிட்டனர். தோனியை போற்றி இப்போதிலிருந்தே மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர். அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜெர்சியை அணிந்துள்ள இளம் வீரர்கள் ஜடேஜா, பிராவோ ,ஹர்பஜன்சிங், முரளிவிஜய் போன்ற வீரர்கள் குத்தாட்டம் போடுகின்றனர். அந்த வீடியோவில் அதில் ரெய்னா, தோனி, ஜடேஜா மூவரும் நாதஸ்வரம் வாசிக்க தோனி ஆட இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close