ஆசிய பில்லியர்ட்ஸ் - சாம்பியன் பட்டம் வென்றார் பங்கஜ் அத்வானி

  Shalini Chandra Sekar   | Last Modified : 24 Mar, 2018 11:23 pm


மியான்மரில் 17வது ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது வந்தது. இன்று நடந்த ஃபைனலில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி மற்றும் பாஸ்கர் பாலசந்திரா மோதினர். இதில் அத்வானி அபாரமாக விளையாடினார். 

6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றார். இது இவரின் 7 வது ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டம். 

புனேவில் பிறந்தவரான அத்வானி பில்லியர்ட்ஸ்ஸில் பல சாதனைகள் படைத்ததற்காக 'ராஜிவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா, பத்ம ஶ்ரீ' ஆகிய விருதுகளை இந்திய அரசு வழங்கியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close