உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்

  Newstm Desk   | Last Modified : 27 Mar, 2018 01:03 pm


சிட்னியில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 7-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. கலப்பு 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில், இந்தியாவின் மனு பாக்கர்- அன்மோல் ஜெயின் இணை 478.9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தனர். வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சீன இணைகள் வென்றன. 

10மீ ரைஃபிள் கலப்பு பிரிவில், இந்தியாவின் ஸ்ரேயா அகர்வால்- அர்ஜுன் பபுதா கூட்டணி வெண்கலம் பெற்றது. ஜூனியர் பெண்கள் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் ஜெனீமத் செக்ஹோன் வெண்கலப் பதக்கம் வென்றார். 

இதன் மூலம், ஒட்டுமொத்தமாக 18 பதக்கங்களை கைப்பற்றியுள்ள இந்தியா, பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 21 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் இருக்கிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close