ஐ.பி.எல்: பெங்களூரு அணி போட்டிக்கான அட்டவணையில் மாற்றம்

  Newstm Desk   | Last Modified : 29 Mar, 2018 05:41 pm


கர்நாடக தேர்தலை முன்னிட்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பங்கேற்கும் போட்டிக்கான இடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

11-வது ஐ.பி.எல் போட்டி வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்க உள்ளது. இதில், விராட் கோலியின் பெங்களூரு அணி, மே 12ம் தேதி ஹோம் கிரவுண்டில் டெல்லி அணியை எதிர்கொள்ள இருந்தது. ஆனால், கர்நாடக தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது.

இதனால், 12ம் தேதி போட்டியை டெல்லிக்கும், ஏப்ரல் 21ந் தேதி டெல்லியில் நடக்க வேண்டிய போட்டி பெங்களுருவுக்கும் மாற்றப்பட்டுள்ளது. மே 17ம் தேதி ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்க பெங்களூரு அணி, மீண்டும் ஹோம் கிரவுண்டுக்கு திரும்பும். 

முன்னதாக, மே 12ம் தேதி முதல் 31ந் தேதி வரை சண்டிகர் விமான நிலையம் புதுப்பிக்கப்பட்ட உள்ளதால், பஞ்சாப் அணி மொஹாலியில் போட்டியிட வேண்டிய சில போட்டிகள் இந்தூருக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு அணி, ஏப்ரல் 8ம் தேதி தனது துவக்க போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. அதே நாளில், மொஹாலியில் டெல்லி தனது துவக்க ஆட்டத்தை, பஞ்சாபுடன் சந்திக்கிறது. டெல்லி அணி, ஏப்ரல் 23ம் தேதி நடக்கும் தனது முதல் ஹோம் கிரவுண்ட் போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close