ஐ.பி.எல் 2018: கொல்கத்தா நைட் ரைடர்ஸின் புதிய ஜெர்ஸி அறிமுகம்

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2018 06:29 pm


11-வது ஐ.பி.எல் போட்டிக்கான புதிய ஜெர்ஸியை இன்று அறிமுகம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. 

கொல்கத்தாவில் நடந்த விழாவில் 2018 சீசனுக்கான ஐ.பி.எல் போட்டிக்கான தங்களது புதிய ஜெர்ஸியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அறிமுகம் செய்தது. இரண்டு முறை சாம்பியனான  கொல்கத்தா அணிக்கு நோக்கியா, 2014ம் ஆண்டு ஸ்பான்சராக பொறுப்பேற்றது. தற்போது நோக்கியா கொல்கத்தா அணியின் முதன்மை பிராண்டாக மாறியுள்ளது. 

கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள தினேஷ் கார்த்திக் ஜெர்ஸியை அறிமுகம் செய்து வைத்தார். அவருடன் பயிற்சியாளர் ஜெகியூஸ் கல்லிஸ் பங்கேற்றார். 


விழாவில் அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக் கான் பங்கேற்கவில்லை என்றாலும், தலைமை அதிகாரி வெங்கி மிஸோர், அணி வீரர்கள் உத்தப்பா, ஆண்ட்ரே ரஸ்ஸல், குலதீப் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடரில் நடக்கும் தங்களது முதல் போட்டியில் கொல்கத்தா அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஏப்ரல் 8ம் தேதி எதிர்கொள்கிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close