வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்து டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்!

  Newstm Desk   | Last Modified : 03 Apr, 2018 01:08 pm


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான். 

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ். இரு அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று முன்னிலை வகித்தது. இந்த நிலையில், நேற்று இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 3 விக்கெட் இழந்து 205 ரன் சேர்த்தது. இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 19.2 ஓவரில் 123 ரன் எடுத்து ஆல்-அவுட்டானது. இதனால் 82 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியது. 

பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close