ஐ.பி.எல்-க்கு தடை விதிக்கக் கோரி வழக்கு

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2018 12:35 pm


ஐ.பி.எல் போட்டிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

11-வது ஐ.பி.எல் போட்டி வரும் 7ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், நாடு முழுவதும் நடக்க இருக்கும் ஐ.பி.எல் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சூதாட்டத்தில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவர் இவ்வழக்கை தொடர்ந்துள்ளார். 

சூதாட்டத்தை தடுக்காமல் போட்டியை நடத்தக் கூடாது என்று தனது மனுவில் சம்பத்குமார் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிசிசிஐ மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 13ம் தேதி இதற்கு பிசிசிஐ மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்து வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

இன்று நீதிமன்றம் எந்தவித உத்தரவும் பிறப்பிக்காததால், ஏப்ரல் 7,8 தேதிகளில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிக்கு எந்த ஒரு தடையும் இருக்காது. ஒருவேளை, 13ந் தேதி அன்று பிசிசிஐ மற்றும் மத்திய அரசு தாக்கல் செய்யும் பதில் மனுவில் திருப்தி அளிக்காத பட்சத்தில், நீதிமன்றம் போட்டிக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close