காமன்வெல்த்: பளுதூக்குதலில் இந்திய வீரர் குருராஜா வெள்ளி

Last Modified : 05 Apr, 2018 09:13 am


ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 2018 காமன்வெல்த் போட்டிகளில், இந்திய வீரர் குருராஜா வெள்ளி பதக்கம் வென்றார்.

நேற்று துவங்கிய காமன்வெல்த் போட்டிகளில், பளுதூக்குதல் 56 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரர் குருராஜா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 111 கிலோ ஸ்நாட்ச் மற்றும் 138 கிலோ க்ளீன் அண்ட் ஜெர்க் என மொத்தம் 249 கிலோ தூக்கினார். முதலிடத்தை பிடித்த மலேசிய வீரர் இசார் அஹ்மத் 261 கிலோ எடையை தூக்கி காமன்வெல்த் போட்டிகளில் புதிய சாதனையை படைத்தார். அவர் 117 கிலோ ஸ்நாட்ச் மற்றும் 144 கிலோ க்ளீன் அண்ட் ஜெர்க் தூக்கி அசத்தினார். 

இலங்கை வீரர் சதுரங்க லக்மால், மொத்தம் 244 கிலோ எடை தூக்கி, வெண்கல பதக்கம் வென்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close