கிரிக்கெட்டில் இருந்து எனக்கு முழுமையான இடைவெளி தேவை- விராட் கோலி!

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2018 02:10 pm


கிரிக்கெட் போட்டியில் இருந்து தனக்கு முழுமையான இடைவெளி தேவைப்படுகிறது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை தொடர்ந்து மூன்று வாரங்களாக பேட்டை விராட் கோலி கையில் எடுக்கவில்லை. இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டியை முன்னிட்டு, கடந்த 12 நாட்களாக பெங்களூருவில் நடந்து வரும் வலைப்பயிற்சியில் பயிற்சி எடுத்து வருகிறார். போட்டியில் பங்கேற்பதில் இருந்து தான் எடுக்கும் இடைவெளி தனக்கு ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுப்பதாக விராட் நம்புகிறார். 

இது குறித்து விராட் கூறுகையில், "எனக்கு ஓய்வு தேவை. உடலளவில் எனக்கு மிகவும் அசௌகரியமாக உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் நான் தீவிரமாக செயல்பட்டேன். ஆனால், இறுதியில் எனது உடல்நலத்துக்கு அது சற்று பாதிப்பை கொடுத்தது. தற்போது எனக்கு கிரிக்கெட் போட்டியில் இருந்து முழுமையான இடைவெளி தேவை என்பதை உணர்கிறேன். மூன்று வாரங்கள் நான் எடுத்த இடைவெளியில், எனது கிரிக்கெட் கிட்-பையை கூட நான் தொடவில்லை. 


நான் மிகவும் வலுவாக உணர்கிறேன். கடந்த 12 நாட்களாக நான் இடைவிடாமல் பயிற்சி எடுத்து வருகிறேன். இப்போது 100 சதவீதமாக இருக்கிறேன். எனினும் எனக்கு 110 சதவீதம் தேவை. இன்னும் மீதமுள்ள 10 சதவீதத்தை பெற இன்னும் நேரம் வேண்டும். 

மூன்று முறை பைனலுக்கு வந்தும் கோப்பையை வெல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. பெங்களூரு ரசிகர்களை விட இந்த சீசனில் கோப்பையை வெல்ல வேண்டும் என நான் மிகவும் உறுதியாக இருக்கிறது. பெங்களூரு அணிக்கு கேரி கிரிஸ்டன் பயிற்சியாளராக கிடைத்ததை மிகவும் சாதகமாக கருதுகிறேன். கேரியின் பயிற்சியில் இந்தியா 2011ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. அணியில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் கேரியுடன் நேரம் செலவிட ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐ.பி.எல்-ல் அணியின் விஷயங்களை நோட்டமிடுவதில் கேரி ஒரு சிறந்த கண்காணிப்பாளர்" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close