டேவிஸ் கோப்பை: உலக சாதனை படைத்தார் லியாண்டர் பயஸ்

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2018 12:24 pm


டேவிஸ் கோப்பை போட்டி வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

தியான்ஜின் நகரில் இந்தியா- சீனா அணிகளுக்கு இடையிலான ஆசியா/ஓசியானியா குரூப் 1 இரண்டாவது சுற்றுக்கான டேவிஸ் கோப்பை போட்டி நடந்து வருகிறது. போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளில் நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியா 0-2 என சீனாவிடம் தோல்வி கண்டது. 

இந்த நிலையில் இன்று நடந்த இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ்- ரோஹன் போபண்ணா ஜோடி பங்கேற்றது. இதில் சீன இணை மோ க்ஸின் காங்- ஸி ஜாங்கை 5-7 7-6(5) 7-6(3) என்ற இந்திய இணை வென்றது. இதனால் இந்திய அணிக்கு ஒரு புள்ளி கிடைத்துள்ளது. இந்த போட்டியின் முடிவில் சீனா 2-1 என முன்னிலை வகிக்கிறது. 

டேவிஸ் கோப்பையில் இந்திய வீரர் லியாண்டர் பயஸுக்கு இது 43-வது வெற்றி ஆகும். இதன் மூலம், 42 வெற்றிகளை பெற்ற இத்தாலியின் நிக்கோலா பிட்ரான்கேலியை முறியடித்து பயஸ் உலக சாதனையை படைத்துள்ளார். 

1990ம் ஆண்டு அறிமுகமான பயஸ், கடந்த டேவிஸ் கோப்பை போட்டியில் உஸ்பேக்கிஸ்தானுடன் நடந்த போட்டியில் தேர்வு செய்யப்படாததால், இந்த சாதனையை தாமதமாக படைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். 90-களில் பயஸ்-பூபதி ஜோடி டென்னிஸ் களத்தை ஆண்டு வந்தது. இருவரும் இணைந்து விளையாடிய 24 போட்டிகளில் எவரும் இவர்கள் வீழ்த்தியதில்லை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close