காமன்வெல்த்: இந்திய பெண்கள் டேபிள் டென்னிஸ் அணி தங்கம் வென்று சாதனை!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2018 05:15 pm


ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய துப்பாக்கிச் சுடு வீராங்கனை மெஹுலி கோஷ் 247.2 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் போட்டியிட்ட நடப்பு சாம்பியன் அபூர்வி சண்டெலா 225.3 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார். 

பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் பர்தீப் சிங், ஆண்களுக்கான 105கிலோ எடைப் பிரிவில், வெள்ளிப்பதக்கம் பெற்றார். 22 வயதான சிங், மொத்தம் 352 கிலோ பளுவை தூக்கினார். சமோவாவின் சன்ல மாவோ தங்கப்பதக்கம் பெற்றார். 

பெண்கள் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய அணி, 3-1 என்ற கணக்கில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. காமன்வெல்த் போட்டியில் இந்திய பெண்கள் டேபிள் டென்னிஸ் அணி வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

தற்போது வரை காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி, 8 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலத்துடன் மொத்தம் 17 பதக்கங்களை பெற்றுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close