சென்னையில் ஐ.பி.எல் போட்டி திட்டமிட்டபடி நடக்கும்- சி.எஸ்.கே அதிகாரி!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2018 05:15 pm


காவிரி விவகாரம் காரணமாக சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை இடம் மாற்றம் செய்யப்படுவதாக எழுந்த வதந்திகளுக்கு சி.எஸ்.கே தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

காவிரி நதிநீர் பங்கிட்டு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மத்திய அரசு செயல்படுத்த தவறியது. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றது. மேலும், மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ஐ.பி.எல் போட்டியை சென்னையில் நடத்தவிடமாட்டோம் என்று சில அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறாது என்றும், சென்னை போட்டிகளை இடம் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. 

இது குறித்து சி.எஸ்.கே அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், "ஐ.பி.எல் போட்டிகளின் இடம் மாற்றம் குறித்து பிசிசிஐ தான் முடிவு செய்யும். காவிரி பிரச்னை தொடர்பான விவரங்களை நாங்கள் பின் தொடர்ந்து வருகிறோம். சென்னையில் நடக்க வேண்டிய போட்டிகள் திட்டமிட்டபடி நிச்சயம் நடக்கும். சென்னை காவல்துறையிடம் நாங்கள் பேசிவிட்டோம். அவர்கள் சூழ்நிலையை பார்த்துக் கொள்வார்கள். போட்டியில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காது என்று நம்புகிறோம்" என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close