கவுன்டி கிரிக்கெட்டில் இணைந்தார் அக்சர் படேல்

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2018 06:28 pm


விராட், புஜாராவை தொடர்ந்து கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறார் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல். 

கவுன்டி கிரிக்கெட் போட்டியில் டர்ஹாம் அணிக்காக ஆறு போட்டிகளில் விளையாடுவதற்கு அக்சர் படேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 19ம் தேதி க்ளாமோர்கன் அணிக்கு எதிராக அக்சர் படேல் அறிமுகமாக இருக்கிறார். மேலும், நார்தம்ப்டன்ஷீர், சசக்ஸ், மீட்டில்செக்ஸ், லேய்ஸ்ஸ்டார் மற்றும் வார்விக்ஷீர் அணிகளுக்கு எதிராகவும் அக்சர் படேல் களமிறங்க இருக்கிறார். 

கவுன்டி போட்டியில் இஷாந்த் சர்மா, வருண் ஆரோன், புஜாரா, விராட் கோலியை தொடர்ந்து பங்கேற்க இருக்கும் ஐந்தாவது இந்திய வீரர் அக்சர் படேல் ஆவார். 

தற்போது அக்சர் படேல், ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் 14-வது இடத்தில் இருக்கிறார். 38 ஒருநாள் போட்டிகளில் அவர் 45 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 

நடந்து வரும் ஐ.பி.எல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் அக்சர் படேல், 23 முதல்தர போட்டிகளில் 79 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close