காமன்வெல்த்: வட்டு எறிதலில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2018 10:50 pm


2018 காமன்வெல்த் வட்டு எறிதல் போட்டியில் இந்தியா தனது பதக்க கணக்கை துவக்கியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு 14-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 

கோல்டு கோஸ்ட்டில் இன்று பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில், இந்திய வீராங்கனைகள் சீமா புனியா (60.41மீ வேகம்) வெள்ளி, மற்றும் நவ்ஜீத் தில்லான் (57.43மீ) வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர். ஆஸ்திரேலியாவின் டானி ஸ்டீவன்ஸ் 68.26மீ வேகத்தில் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். 

சீமாவின் நான்காவது காமன்வெல்த் பதக்கம் இதுவாகும். 2006, 2010 மற்றும் 2014 ஆண்டுகளின் நடைபெற்ற போட்டிகளின் முறையே வெள்ளி, வெண்கலம், வெள்ளி பதக்கங்களை அவர் வென்றிருக்கிறார். 2002ம் ஆண்டு சீமா, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். 2014ல் நடந்த இஞ்சேன் ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தியா 14 தங்கம், 7 வெள்ளி மற்றும் 10 வெண்கலத்துடம் ஒட்டுமொத்தமா 31 பதக்கங்களை பெற்றுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close