காமன்வெல்த்: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அனிஷ் தங்கம் வென்றார்

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2018 11:28 am


ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டி நடைபெறுகிறது. இன்று ஆண்களுக்கான 25மீ ரேபிட் ஃபயர் துப்பாக்கி சுடு பிரிவு போட்டியில், இந்திய வீரர் அனிஷ் பன்வாளா (15)  தங்கப் பதக்கம் வென்றார். 

போட்டியில் அனிஷின் ஸ்கோர் 30 ஆகும். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் இளம் வீரர் என்ற பெயரை அனிஷ் பெற்றுள்ளார். இவ்களேவ்ஸ்கி, 28 புள்ளிகளுடன் வெள்ளியும், கோவின் 17 புள்ளிகளுடன் வெண்கலமும் பெற்றனர்.

ஹாக்கி பிரிவில் நடந்த அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்தியா 0-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. 

இந்தியா தற்போது வரை 16 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் தொடர்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close