காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2018 12:18 pm


காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார் நமன் தன்வார். 

21-வது காமன்வெல்த் போட்டியில், ஆண்களுக்கான குத்துச்சண்டை அரையிறுதியில் 91 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் நமன், ஆஸ்திரேலியாவின் ஜேசன் வாடேலேவிடம் மோதினார். இதில் 0-4 என்ற கணக்கில் நமன், ஜேசனிடம் தோல்வி கண்டு வெண்கலம் வென்றார். காலிறுதியில் தன்சானியாவின் ஹருணா ம்ஹண்டோவை 5-0 என நமன் வென்றிருந்தார்.

தன்வாரின் முதல் சீனியர் போட்டிக்கான பதக்கம் இதுவாகும். 19 வயதான தன்வார், 2016ம் ஆண்டு உலக யூத் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்றிருந்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close