காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் மேரி கோம்!

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2018 07:55 am


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தங்கம் வென்றுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் கோல்டு கோஸ்ட் நகரில் 2018ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா தரப்பில் தொடர்ந்து தங்கப்பதக்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது. 

இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், காமன்வெல்த் போட்டியில் மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இது இந்தியாவிற்கு 18வது பதக்கம் ஆகும். வடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டினா ஒகராவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் மேரி கோம். 

இதன்மூலம் இந்தியா 18 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் என 43 பதக்கங்கள் பெற்று 3வது இடத்தில் உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close