ஐ.பி.எல்: சி.எஸ்.கே வேகப்பந்து வீச்சாளர் லுங்கி ங்கிடி-ன் தந்தை காலமானார்

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2018 02:11 pm


சி.எஸ்.கே அணியின் லுங்கி ங்கிடியின் தந்தை காலமானதால் தென் ஆப்பிரிக்காவுக்கு அவர் திரும்புகிறார் என்று கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.

லுங்கி ங்கிடியின் தந்தை ஜெரோம் ங்கிடி. நேற்று இவர் அங்குள்ள கிவாஸுலு-நாட்டல் மருத்துவமனையில் காலமானார். இளம் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி ங்கிடி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்சில் 6 விக்கெட் கைப்பற்றினார். இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் சீசனில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரூ.50 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டார். சென்னை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ங்கிடி தேர்வு செய்யப்படவில்லை. 

தென் அப்பிரிக்காவுக்காக இதுவரை ங்கிடி மூன்று டெஸ்ட், நான்கு ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close