காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2018 03:37 pm


காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தங்கம் வென்றார்.

21-வது காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்- வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்த வண்ணம் உள்ளனர். இன்று நடைபெற்ற போட்டிகளில் தற்போது வரை ஏழு தங்கப் பதக்கங்கள் வெல்லப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பட்டியலில் பதக்கங்கள் 55-ஆக உயர்ந்துள்ளது.

பெண்கள் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில், மணிகா பத்ரா 4-0 என்ற கணக்கில் சிங்கப்பூரின் மெங்கியு யுவை தோற்கடித்து இந்தியாவுக்கு 24-வது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார். காமன்வெல்த் போட்டியில் பெண்கள் டேபிள் டென்னிஸ் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை மணிகா படைத்துள்ளார்.

ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவு போட்டியில், இந்திய இணையான தீபிகா பல்லிக்கல்- சௌரவ் கோஷல், இறுதிச் சுற்றில் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளனர்.

பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா- சிக்கி ரெட்டி ஜோடி வெண்கலம் வென்றுள்ளது. 

இதன் மூலம் இந்தியா 24 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் நீடித்து வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close