காமன்வெல்த் போட்டியில் சாய்னா நேவால் தங்கம் வென்றார்

  Newstm Desk   | Last Modified : 15 Apr, 2018 08:00 am
காமன்வெல்த் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 2018ம் ஆண்டுக்கான காமன்வெல்த்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
11வது நாளான இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் மோதினர். இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் உறுதியான நிலையில் மிக பரபரப்பாக இந்த போட்டி நடைபெற்றது.
இதில் சாய்னா அதிரடியாக விளையாடி 21-18 மற்றும் 23-21 என்ற புள்ளிக்கணக்கில் பி.வி.சிந்துவை வீழ்த்தி தங்க பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவின் பதக்கப்பட்டியல் 26 தங்கம், 17 வெள்ளி மற்றும் 19 வெண்கலத்துடன் 62ஆக உயர்ந்துள்ளது. இந்தியா தொடர்ந்து 3வது இடத்தில் நீடித்து வருகிறது.
இன்றைய பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற இருவரும் கோபிசந்திடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close