பேட்மிண்டன், ஸ்குவாஷ் போட்டிகளில் இந்தியாவிற்கு வெள்ளி

  Newstm Desk   | Last Modified : 15 Apr, 2018 08:55 am

காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளில் இந்திய வீரர்கள் வெள்ளிப்பதக்கம் வென்றனர். 

21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 11வது நாளான இன்று ஆண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் கிடாம்பி ஶ்ரீகாந்தும், மலேசியாவின் லீ சாங்கை எதிர்த்து விளையாடினார். கடுமையான போராட்டத்திற்கு பிறகு ஶ்ரீகாந்த் 19-21, 21-14, 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவி வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

முன்னதாக இன்று நடந்த மகளிர் இரட்டையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஜோஷ்னா சின்னப்பா இணை பங்கேற்றது. இதில், தோல்வியைத் தழுவிய இந்திய இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.

மேலும் டேபிள் டென்னிஸ் போட்டயில் இந்திய வீரர் சரத் கமல் வெண்கல பதக்கம் வென்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close