காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்தன: இந்திய கொடியை ஏந்துகிறார் மேரி கோம்

  Newstm Desk   | Last Modified : 15 Apr, 2018 03:22 pm

12 நாட்களாக நடந்த காமன்வெல்த் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. இதில் இந்தியா 66 பதக்கங்களுடன் 3ம் இடத்தை பிடித்தது. 

 21வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில், ஏப்ரல் 4ம் தேதி  தொடங்கியது. கடற்கரை நகரமான கோல்டு கோஸ்ட்டில் உள்ள கர்ராரா மைதானத்தில்தான் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.   

தொடக்க விழாவில் ஆயிரக்கணக்கான நடன கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 35 ஆயிரம் பார்வையாளர்கள் நேரில் கண்டுகளித்தனர்.  

மொத்தம் 19 விளையாட்டுகளில் 275 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, தென் ஆப்ரிக்கா, ஜமைக்கா, கென்யா, நைஜீரியா உள்ளிட்ட 71 நாடுகளை சேர்ந்த 4,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில், 218 வீரர், வீராங்கனைகள், 17 விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். அனைத்து நாடுகளின் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் அணிவகுப்பில், இந்திய மூவர்ண கொடியை பி.வி.சிந்து ஏந்தி வந்தார்.

12 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இந்த நிலையில் மாலையில் போட்டி நிறைவு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் இன்று பிரமாண்டமாக நடைபெற வுள்ளன.

நிறைவு விழாவின் அணிவகுப்பின்போது இந்திய தேசியக் கொடியை மேரிகோம் ஏந்திச் செல்லவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக இந்த ஆண்டு மேரி கோம் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு காமன்வெல்த் போட்டியில் 66 பதக்கங்களுடன் இந்தியா 3வது இடத்தை பிடித்தது. இதில் 26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கல பதக்கங்கள் அடங்கும். முதல் இரண்டு இடத்தை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து பிடித்தன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close