மும்பை தெருவில் கிரிக்கெட் விளையாடிய சச்சின்- வைரல் வீடியோ

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2018 11:58 am


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கர் சாலையில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் மட்டுமின்றி சமூகநலன் மீதும் சச்சின் அக்கறை கொண்டவர் என்பதை அவ்வப்போது சாலையில் பொதுமக்களிடம் ஹெல்மெட் அணியச் சொல்லி அறிவுறுத்துவார். அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும். ஆனால் இந்த முறை அவரது வைரலாகும் வீடியோவில் சாலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். 


இந்திய கிரிக்கெட் அணியில் சச்சினினுடன் விளையாடிய வினோத் கம்பளி அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில், சச்சின் காரில் இருந்து இறங்கி சாலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் தானும் விளையாடி மகிழ்ந்தார். இதனால் சந்தோஷத்தில் இளைஞர்கள் திக்குமுக்காடி விட்டனர். 

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய அங்கமாக இருந்த சச்சின், ஐ.பி.எல்-ல் 78 போட்டிகளில் 2,334 ரன் அடித்துள்ளார். சராசரி 34.83. ஸ்ட்ரைக் ரேட் 119.81. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close