இலங்கையின் பீல்டிங் பயிற்சியாளர் நிக் போதாஸ் ராஜினாமா

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2018 03:45 pm


இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தகாலத்திற்கு முன்பாகவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் தென் ஆப்பிரிக்காவின் நிக் போதாஸ். 

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பீல்டிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்- பேட்ஸ்மேனாக இருந்த நிக் போதாஸ் நியமிக்கப்பட்டார். இலங்கை அணியின் ஆலோசகராக இருந்த கிரஹாம் போர்ட் திடீரென பதவி விலகியதால், கடந்த 2016ம் ஆண்டு போதாஸ் தேர்வு செய்யப்பட்டார். இலங்கை கிரிக்கெட் வாரியம் அவரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது. அவருடைய ஒப்பந்த காலம் வருகிற ஆகஸ்ட் மாதம் முடிவு பெற உள்ளது. 

ஆனால், தன்னை அதற்கு முன்னதாகவே விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டாட போதாஸ், கடந்த ஏப்ரல் 13ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட முடியும் என்று போதாஸ் எதிர்பார்க்கிறார். 

இங்கிலாந்தின் சௌதாம்ப்டனில் வாழ்ந்து வரும் போதாஸ், பயிற்சியாளருக்கான வாய்ப்பை யு.கே-வில் தேடி வருகிறார். கடந்த ஆண்டு லாகூரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியுடன் போதாஸ் பங்கேற்கவில்லை. 

போதாஸ் பதவி காலத்தில், இலங்கை அணி அடுத்தடுத்த தொடர்களில் உலகின் நம்பர் ஒன் அணியான இந்தியாவிடம் மோசமான தோல்வியை தழுவியது. மேலும், ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல்முறையாக இலங்கை தோல்வி அடைந்தது. ஆனால் இதில் ஹைலைட்டாக, 2010ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் யு.ஏ.இ-ல் வீழ்த்தியது.

போதாஸுக்கு பதில் வேறொரு பயிற்சியாளரை நியமிக்கப்போவதில்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பயிற்சியாளர் குழுவில் இருக்கும் உபுல் சந்தனா மற்றும் மனோஜ் அபேய்விக்ரமா பீல்டிங் பயிற்சியை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close