ஐ.பி.எல்-ல் அதிக ரன்: ரெய்னாவை பின்னுக்குதள்ளி முதலிடம் பிடித்தார் விராட் கோலி

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2018 12:54 pm


ஐ.பி.எல் போட்டியில் அதிக ரன்கள் விளாசி ரெய்னாவை பின்னுக்கு தள்ளியுள்ளார் பெங்களூரு கேப்டன் விராட் கோலி.

வான்கடே மைதானத்தில் பெங்களூரு அணியை மும்பை இந்தியன்ஸ் 46 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் பெங்களூருவின் வெற்றிக்காக விராட் போராடினார். ஆனால் அவர் அடித்த 92 ரன்களால் அணியின் வெற்றிக்கு பலனில்லாமல் போனது. இருப்பினும் ஐ.பி.எல் போட்டியில் இந்த ஸ்கோரால் விராட் ஒரு சாதனையை நிகழ்த்தினார். 

92 ரன்கள் மூலம், ஐ.பி.எல் போட்டியில் 4619 ரன்களை நேற்று நிறைவு செய்து, முதலிடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னாவை பின்தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தார். ரெய்னா 163 இன்னிங்சில் 4558 ரன் அடித்துள்ளார். ஐ.பி.எல்-ல் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா (4345 ரன்) மூன்றாவது, கவுதம் கம்பிர் (4210 ரன்) நான்காவது, டேவிட் வார்னர் (4014 ரன்) ஐந்தாவது இடங்களில் உள்ளனர். 


இது தவிர தனிநபர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் பட்டியலில், விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். ரோஹித் சர்மா நேற்றைய போட்டியில் 94 ரன் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். 

டாப் 5 தனிநபர் ஸ்கோர் பட்டியல் பின் வருமாறு:-

தேதிவீரர்கள்ரன் அணிஎதிரணி
ஏப். 17, 2018ரோஹித் சர்மா 94மும்பை இந்தியன்ஸ் பெங்களூரு
ஏப். 17, 2018
விராட் கோலி 92ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருமும்பை
ஏப். 15, 2018
சஞ்சு சாம்சன்92ராஜஸ்தான் ராயல்ஸ்பெங்களூரு
ஏப். 14, 2018
ஜேசன் ராய் 91டெல்லி டேர்டெவில்ஸ் மும்பை
ஏப். 10, 2018
ஆண்ட்ரே ரஸ்ஸல்88கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சி.எஸ்.கே

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close