2018 ஐ.பி.எல்-ல் சதமடித்த முதல் வீரரானார் கிறிஸ் கெய்ல்!

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2018 01:09 pm


11-வது ஐ.பி.எல் போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பஞ்சாபின் கிறிஸ் கெய்ல். 

மொகாலியில் நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 15 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  வென்றது. இதன் மூலம், போட்டியில் மூன்றாவது வெற்றியை  பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் திகழ்ந்தார். 63 பந்துகளில் 11 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 104 ரன்களை அவர் விளாசியிருந்தார். இதன் மூலம், இந்த ஐ.பி.எல்-ல் சதமடித்த முதல் வீரரானார். ஐ.பி.எல் போட்டியில் இது அவருடைய ஆறாவது சதமாகும். டி20ல் 21-வது சதம் ஆகும். 

வெற்றிக்கு பிறகு கெய்ல் கூறுகையில், "நிறைய பேர் எனக்கு வயசாகிவிட்டது என்று கூறினர். இந்த  இன்னிங்சுக்கு பிறகு அவர்களுக்கு நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. என் மகளுக்கு நாளை (இன்று) பிறந்தநாள். அவளுக்கான பரிசாக இந்த சதந்தை அர்ப்பணிக்கிறேன்" என்றார்.


ஐ.பி.எல் போட்டியில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் இருக்கிறார். கெய்லின் முன்னாள் அணி (பெங்களூரு) கேப்டன் விராட் கோலி, நான்கு சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 

கெய்லின் முதல் சதம், 2011ம் ஆண்டு கொல்கத்தா (102 ரன்) அணிக்கு எதிராக அடிக்கப்பட்டது. அதே ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக (107 ரன்)  2-வது சதத்தை அவர் பூர்த்தி செய்தார். 2012ம் வரும் டெல்லிக்கு எதிராக 128 ரன் விளாசி மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார். 2013ல் புனே வாரியர்சுக்கு எதிராக (175 ரன்) நான்காவது சதத்தை அடித்தார். 2015ல் மீண்டும் பஞ்சாபுக்கு எதிராக பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த கெய்ல் (117 ரன்) ஐந்துவது சதமடித்தார். இந்த சீசனுக்கான ஐ.பி.எல் ஏலத்தில் பல போராட்டங்களுக்கு பிறகு பஞ்சாப் அவரை அடிப்படை விலைக்கு (ரூ.2 கோடி) வாங்கியது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close