'டைம்' இதழின் செல்வாக்குமிக்க பிரபலங்கள் பட்டியலில் விராட் கோலி!

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2018 05:12 pm


இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, 'டைம்' இதழின் மிகவும் செல்வாக்குமிக்க 100 பிரபலங்கள் அடங்கிய பட்டியலில்  இடம் பிடித்துள்ளார். 

கடந்த ஆண்டு விராட் கோலி, அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் சேர்த்து 2818 ரன்கள் குவித்தார். இதில் 11 சதங்களும் அடங்கும். சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டியில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி இறுதிச் சுற்றுக்கு விராட் முன்னேற்றி இருந்தார். தவிர, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றினார். வங்கதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை (இரண்டு முறை) அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் அவர் கைப்பற்றினார்.

விராட்டின் பெயர் பட்டியலில் இடம் பெற்றதற்கு ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதில் அவர், விராட் களத்தில் நிலைத்து நின்று ஆடி ரன்களை குவிக்க ஆர்வம் கொண்டவர். இது குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேலும், இது அவருடைய போட்டியின் தனித்தன்மையாகும். 


இது தவிர சச்சின் 2008ம் ஆண்டு யு-19 உலக கோப்பை போட்டியையும் நினைவுகூறியிருந்தார். "இந்திய அணியை வழிநடத்திய கோலியை பார்த்தேன். யு-19 உலக கோப்பை இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். அப்போது தான் நான் முதல்முறையாக அந்த இளம் வீரரை பார்க்கிறேன். அதீத ஆர்வமுடைய வீரரான அவர் தற்போது கிரிக்கெட்டில் சாம்பியன் ஆக உள்ளார். அதற்கு பிறகும் அவரது போட்டியில் அந்த ஆர்வத்தின் பசி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. பல விமர்சனங்களை சந்தித்துள்ள கோலி, அதை எல்லாம் திரும்பி பார்ப்பதில்லை. அதற்கு பதிலடி கொடுப்பதோடு சரி" என்று சச்சின் கூறினார். 

சச்சினின் இந்த பாராட்டுக்கு, விராட் கோலி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். ட்விட்டரில், "நன்றி பாஜி.. உங்களுடைய ஊக்கமளிக்கக்கூடிய பாராட்டுக்கு. டைம் இதழின் 100 செல்வராக்குமிக்க பட்டியலில் இடம் பெற்றதை கௌரவமாக நினைக்கிறன்" என்று குறிப்பிட்டார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close