ஐபிஎல்: டாஸ் வென்றது மும்பை... போட்டியை வெல்லுமா?

  ஐஸ்வர்யா   | Last Modified : 24 Apr, 2018 08:03 pm


மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 23வது ஐபிஎல் போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் வில்லியம்ஸன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஐபிஎல் நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இடையே‌ கடந்த 12ம் தேதி நடந்த போட்டியில் அதில், ஹைதராபாத் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 5 போட்டிகளில் விளையாடியுள்ள நடப்புச் சாம்பியனான மும்பை அணி, ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. முதல் 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றியை வசமாக்கியிருந்த ஹைதராபாத் அணி, கடைசியாக விளையாடிய 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது.

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணி வீரர்கள் இன்று களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்து ஹைதரபாத் அணிக்கு பேட்டிங்கை விட்டுக்கொடுத்துள்ளது. 

மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளிலும் முதல் பேட்டிங்கையே செய்துள்ளது. ஆனால் தற்போது நடைபெறும் இந்த ஆட்டத்தில் தான் ஹைதராபாத் அணியை முதலில் பேட்டிங் செய்யும்படி அழைத்துள்ளது. இந்த சீசனில் சேஸிங் செய்யும் அணிதான் வெற்றிபெறுகின்றன. இதனால், இந்த போட்டியிலாவது மும்பை வெற்றிபெறுமா என்று மும்பை ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close