உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2018 08:14 am

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. 

2019ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 

அடுத்தாண்டு மே மாதம் 30ந்தேதி தொடக்கி ஜூலை 30ந்தேதி வரை பிரிட்டனில் இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் ஜூன் மாதம் 5ம் தேதி இந்திய- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து ஜூன் 16ந்தேதி நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பெரும்பாலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் தொடக்க போட்டியாக இருந்து வந்த நிலையில், ரவுண்டு ராபின் லீக்  அடிப்படையில் நடக்க உள்ள இந்த தொடரில் முதல் முறையாக அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 1992ல் நடந்தததைப் போல ஒவ்வொரு  அணியும் மற்ற அணிகள் அனைத்துடனும் லீக் சுற்றில் மோதவுள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close