தொடரும் டேர்டெவில் சொதப்பல்: பதவி விலகினார் கம்பிர்!

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2018 05:35 pm


டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கவுதம் கம்பிர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். கம்பிருக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

11-வது ஐ.பி.எல் போட்டியில் தடுமாறி வரும் டெல்லி அணி, புள்ளிப் பட்டியலில் கடைசியாக உள்ளது. ஆறு போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே இதுவரை டெல்லி பதிவு செய்துள்ளது.

2010ம் ஆண்டு டெல்லி அணியை கம்பிர் வழி நடத்தும் போது, அணி ஐந்தாவது இடத்தை பிடித்தது. அதன் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழி நடத்திய கம்பிர், இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்தார். 7 ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடி கம்பிர் 3035 ரன் அடித்தார். 

2018 சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய கம்பிர் பார்மில் இல்லாததது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாகியது. மேலும், தனது சொந்த ஊர் அணிக்கு கோப்பையை வென்று கொடுக்கும் கனவோடு இருந்த கம்பிருக்கு டெல்லியின் மோசமான தோல்விகள் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதன் காரணமாக தற்போது அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.  

இது குறித்து கம்பிர் அளித்த பேட்டியில், "இது முழுக்க முழுக்க என்னுடைய முடிவு. அணி நிர்வாகம் என்னை கட்டாயப்படுத்தவில்லை. இது தான் சரியான நேரம் நான் விலக. டெல்லி அணி சரிவுக்கு காரணம் நான் தான். அதற்கான முழு பொறுப்பும் என்னுடையது தான். அதனால் எனது கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பை ஏற்பார். இந்த ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணி மீண்டு வரும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close