விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை

  Newstm Desk   | Last Modified : 26 Apr, 2018 04:30 pm


இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. 2016ம் ஆண்டு விராட் பெயர் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், ஒலிம்பிக் நடைபெற்றதால், பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் இவ்விருதினை பெற்றனர். இந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக பிசிசிஐ விராட் பெயரை பட்டியலில் சேர்த்துள்ளது.

இந்திய யு-19 அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு, துரோணாச்சார்யா விருது, சுனில் கவாஸ்கருக்கு தயான் சான் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கவும் பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் உறுதி செய்துள்ளார். இந்திய அணியின் முன்னணி துவக்க வீரர் ஷிகர் தவான், பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கவும் பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. 

இவர்களை தவிர, உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற ஷாஹ்ஸார் ரிஸ்விக்கு அர்ஜுனா விருது வழங்க தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் பரிந்துரைத்திருக்கிறது. 

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சனு மற்றும் சஞ்சிதா சனுக்கும் அர்ஜுனா விருது வழங்க தேசிய பளுதூக்கும் சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது.

மல்யுத்த சம்மேளனம், ரித்து போகாட், ஜோதி, பவன் குமார், வினோத் ஓம்பிரகாஷ், சுமித் ஆகியோரை பரிந்துரைத்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close