தி பெஸ்ட் அப்பாவாக ஜொலிக்கும் தோனி- வைரல் வீடியோ

  Newstm Desk   | Last Modified : 27 Apr, 2018 03:27 am


ஐபிஎல் போட்டியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் அவரது மகள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், தோனி, ராயுடுவின் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் விளாசிய தோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டதை அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று மைதானத்தில் சிக்ஸர்களால் பந்தை பறக்கவிட்ட தோனி, இன்று வீட்டில் தன் மகள் ஸிவாவின் முடியை உலர்த்துவது போன்ற வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தன் மகள் மீது அதீத பாசம் வைத்த தோனி, ஹேர் ட்ரையர் மூலம் மகளின் தலைமுடியைக் காயவைப்பது போன்ற இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 


வீடியோவை பதிவிட்டு அதற்கு கீழ் `ஆட்டம் முடிந்தது, நல்ல தூக்கத்துக்குப் பின்னர், தற்போது மீண்டும் தந்தை பணிக்குத் திரும்பிவிட்டேன்’ என பதிவிட்டுள்ளார். மைதானத்தில் பெஸ்ட் கேப்டன் மட்டுமல்ல வீட்டில் தி பெஸ்ட் அப்பாவாகவும் வலம்வருகிறார் நம்ம தல தோனி!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close