2021 சாம்பியன்ஸ் ட்ராஃபியை 'உலக டி20' போட்டியாக மாற்றியது ஐசிசி!

  Newstm Desk   | Last Modified : 27 Apr, 2018 11:43 am


சாம்பியன்ஸ் ட்ராஃபி, உலக டி20 போட்டியாக மாற்றப்பட இருக்கிறது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது. 

கொல்கத்தாவில் ஐசிசி-ன் ஐந்து நாள் காலாண்டு மாநாடு நடந்து வந்த நிலையில், மாநாட்டின் கடைசி நாளான நேற்று ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், 2021ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் ட்ராஃபி, உலக டி20 போட்டியாக நடைபெறும் என்று அறிவித்தார். ஏற்கனவே 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உலக டி20 போட்டி நடக்க உள்ளது. 

தற்போது இரண்டு உலக டி20 போட்டிகளை (2020, 2021) வெற்றிகரமாக நடக்கும் என்று ரிச்சர்ட்சன் தெரிவித்தார். அதன் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக டி20 தொடர் நடைபெறும் எனவும், 50 ஓவர் சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், 12 அணிகள் டெஸ்ட் போட்டிகளிலும், 20-30 நாடுகள் ஒருநாள் போட்டிகளிலும் மற்றவர்கள் டி20 போட்டிகளிலும் விளையாடுவார்கள். 104 நாடுகளுக்கு சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்றும் ரிச்சர்ட்சன் தெரிவித்தார். 

எதிர்கால போட்டி திட்டத்திற்கான இறுதி அமைப்பு:

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை - 2019, 2023

ஐசிசி உலக டி20 - 2020, 2021

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் - 2021, 2023

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

சுழற்சி 1 - 2019-2021

சுழற்சி 2 - 2021-2023

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தகுதிக்கான லீக் - 2020-2022.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close