ஆசிய பேட்மின்டன்: அரையிறுதியில் சாய்னா, பிரணாய் தோல்வி

  Newstm Desk   | Last Modified : 28 Apr, 2018 05:13 pm


ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வி அடைந்து வெளியேறினர். 

பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாய்னா நேவால், ஹெச்.எஸ். பிரணாய் அரையிறுதிக்கு முன்னேறி இருந்தனர். இந்த நிலையில், இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், சாய்னா 25-27, 19-21 என்ற கணக்கில் 2ம் இடம் வகிக்கும் சீன தைபேவின் தாய் ட்சுவிடம் தோல்வி கண்டார். 

இதே போல், ஆண்கள் ஒற்றையரில், பிரணாய்  16-21, 18-21 என சீனாவின் சென் லோங்கிடம் வீழ்ந்தார். முன்னதாக, பி.வி. சிந்து, ஸ்ரீகாந்த் கிடாம்பி ஆகியோர் காலிறுதியில் தோல்வி கண்டு வெளியேறியிருந்தனர்.  ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு பிரிவு போட்டிகளிலும் இந்திய வீரர்கள் தோல்வி அடைந்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close