சி.எஸ்.கே.. சி.எஸ்.கே.. தோனி மகள் ஸிவாவின் அடுத்த வைரல் வீடியோ

  Shanthini   | Last Modified : 01 May, 2018 12:30 am

தோனி ட்விட்டரில் பதிவிட்ட தனது மகள் நடமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

தோனியை போல அவரது மகள் ஸிவா என்ன செய்தாலும் வைரலாகிறது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து வீரர்கள் தங்கள் குடும்பதினருடன் போட்டி நடக்கும் இடங்களுக்கு செல்கின்றனர். 

இதன் விளைவாக சென்னை அணியின் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரின் மகள்கள் நண்பர்களாகி விட்டனர். அவர்கள் இணைந்து விளையாடும், பேசும் புகைபடங்கள், வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. 

இந்நிலையில் நேற்று சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், 3 குழந்தைகளும் ரிங்கா ரிங்கா ரோசர்ஸ் விளையாடும் வீடியோவை பதிவிட்டார். அந்த வீடியோ உடனே பலரால் பகிரப்பட்டு இணையத்தை கலக்கியது. இந்நிலையில், அடுத்ததாக தோனி பதிவிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

அதில் ஸிவா சி.எஸ்.கே.. சி.எஸ்.கே.. என்றப்படி நடனமாடுகிறார். இந்த வீடியோ பதிவில், குறைந்த பட்சம் அப்பாவை விட நன்றாக நடனமாடு என்று தோனி குறிப்பிட்டிருந்தார். 

வீடியோ:  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close