அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு முதன்முதலாக பெண், தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2018-19 சீசனுக்கான அயர்லாந்து கிரிக்கெட் தலைவராக ஐதீன் ரைஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடன் போட்டியிட்ட பிரைன் வால்ஷை வென்று ரைஸ், அயர்லாந்தின் முதல் பெண் தலைவராக்கப்பட்டு இருக்கிறார்.
1970ல் ரைஸ், லெய்ன்ஸ்டர் கிரிக்கெட் நிர்வாகத்தில் ஈடுபட்டிருந்தவர், பின் ஒய்.எம்.சி.ஏ கிரிக்கெட் கிளபின் இளம் நிர்வாகியாக 18 ஆண்டுகள் இருந்தார். அதன் பின் லெய்ன்ஸ்டர் கிரிக்கெட் ஒன்றியத்தின் நிர்வாகி (2005-2007); லெய்ன்ஸ்டர் கிரிக்கெட்டின் இளைஞர் மற்றும் பள்ளிகள் பிரிவு நிர்வாகி (2010-2012) மற்றும் பயிற்சியாளர்களின் செயலாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
2012ம் ஆண்டு ரைஸ், கிரிக்கெட் அயர்லாந்து வழங்கிய ஆண்டின் தொண்டர் விருதை பெற்றார். 2015ல் ஒய்.எம்.சி.ஏ கிரிக்கெட் கிளபின் தலைவராக இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.
தற்போது அயர்லாந்து கிரிக்கெட் வாரிய தலைவராக தேன்தேக்கப்பட்டது குறித்து ரைஸ், "இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதையை. ஆனால், என்னைக் காட்டிலும் பல பெண்கள் இந்த இடத்துக்கு தகுதியானவர்கள் என்று நினைக்கிறன்" என்றார்.