வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ரோன்ஸபோர்ட் பேட்டனுக்கு தடை

  Newstm Desk   | Last Modified : 02 May, 2018 02:36 pm


வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ரோன்ஸபோர்ட் பேட்டன் பந்துவீச ஐசிசி தடை விதித்துள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட்டன் பங்கேற்றார். அப்போது அவரது பந்துவீச்சில் சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து சோதிக்கப்பட்ட பந்துவீச்சு மதிப்பீட்டிலும் பேட்டன் தோல்வி அடைந்தார். இவருடைய பந்துவீச்சு மீண்டும் மதிப்பீடு செய்வதற்கு முன்பாக, ஆன்டிகுவாவில் வேகப்பந்து வீச்சு முகாமில் பேட்டன் இணைந்துள்ளார்.

பந்துவீச்சில் பேட்டன் விதிமீறல் செய்வது இது முதல்முறை அல்ல. 2012ம் ஆண்டு யு-19 அணியில் இடம் பெற்றிருந்த போது, முதல்முறையாக குற்றம் சுமத்தப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இரண்டு ஒருநாள் போட்டிகளில் பேட்டன் விளையாடியுள்ளார். இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியை அவர் எதிர்கொண்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close