'சும்மா' இருக்கும் மலிங்கா; இலங்கைக்கு உடனே திரும்ப எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 02 May, 2018 04:38 pm


ஐ.பி.எல்-ல் லசித் மலிங்கா, தனது நேரத்தை வீணடித்து கொண்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வருத்தம் தெரிவித்துள்ளது. 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. இவர் கடந்த ஏழு மாதங்களாக இலங்கை அணியில் இடம் பெறாமல் உள்ளார். கடைசியாக உள்ளூர் தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். இந்த அடுக்கான ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை தக்கவைத்துக் கொள்ளவில்லை. ஐ.பி.எல் ஏலத்தில் வாங்கப்படாத மலிங்கா, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, இலங்கையில் நடக்கும் உள்ளூர் போட்டிக்கான அணியில் மலிங்காவின் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால், ஐ.பி.எல் தொடர் முடியும் வரை எந்த ஒரு உள்ளூர் போட்டியிலும் தான் பங்கேற்க போவதில்லை என்று மலிங்கா தெரிவித்தார். தவிர, சர்வதேச போட்டி என்றால் விளையாட தயாராக இருப்பதாகவும் கூறினார். 

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் திலங்கா சுமதிபாலா கூறுகையில், "உள்ளூர் போட்டியில் விளையாடாத மலிங்காவின் இந்த செயலை தேர்வுக்குழு கேட்க வேண்டும். சர்வதேச டி20 போட்டியில், இலங்கை அணியில் மலிங்கா இடம் பெற விரும்புகிறோம். ஐ.பி.எல் போட்டியில் தற்போது அவர் பங்கேற்றிருந்தால், எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அணியில் இடம் பெறாமல் வெளியில் அவர் அமர்ந்திருப்பது தான் பிரச்னை" என்று தெரிவித்தார். 

இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை அதிகாரி ஆஷ்லே டி சில்வா, "உள்ளூர் போட்டியில் அவர் விளையாட மறுத்து வந்தால், தேசிய அணியில் இடம் பெறும் மலிங்காவின் வாய்ப்புக்கான கதவு மூடப்படும். உள்ளூர் போட்டிக்கான அணியில் மலிங்கா இடம் பெற்றுள்ளார் என்பதை அவரிடம் தெரிவித்தோம். அப்படி இருந்தும் போட்டியில் பங்கேற்கவில்லை என்றால், தேர்வுக்குழு அவரை கருத்தில் கொள்ளாது" என்றார்.

காயத்தில் இருந்து மீண்டு வந்த மலிங்கா, 13 ஒருநாள் போட்டிகளில் வெறும் 10 விக்கெட்களே எடுத்தார்.

வரும் ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா விளையாட இருக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close